100 நாள் வேலைதிட்ட ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் தீர்மானம்
100 நாள் வேலை திட்டத்தின் தினசர் ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்தி வழங்கவேண்டும் என தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் விருதுநகர் வட்டார பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விருதுநகர்,
தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் விருதுநகர் வட்டார பேரவை கூட்டம் விருதுநகர் ஏ.ஐ.டி.யூ.சி. அரங்கில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாய சங்கத்தின் வட்டார தலைவர் ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் முருகேசன், காதர் முகைதீன், தொழிற்சங்க பிரமுகர்கள் பாண்டியன், ஆதிமூலம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி.லிங்கம் சிறப்புரையாற்றினார்.
இதனை தொடர்ந்து கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:–
100 நாள் வேலை திட்டம் என்பதை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். இத்திட்டத்தின் கீழ் தினசரி ஊதியமாக ரூ.400 வழங்க வேண்டும். ஊதியத்தை தாமதமின்றி உடனுக்குடன் வங்கிக்கணக்கில் வரவு வைக்கவேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர் முத்துக்குமார் நன்றி கூறினார்.