ஸ்ரீபெரும்புதூர் அருகே துப்புரவு தொழிலாளி வெட்டிக்கொலை

ஸ்ரீபெரும்புதூர் அருகே துப்புரவு தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2018-08-19 20:54 GMT
வாலாஜாபாத்,

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கீவளூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவசுந்தரமூர்த்தி (வயது 31). துப்புரவு தொழிலாளி. இவர் கீவளூர் கிராமத்தின் குளக்கரை அருகே இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சிலர் தேவசுந்தரமூர்த்தியிடம் தகராறு செய்து கத்தியால் அவரை வெட்டி உள்ளனர். படுகாயம் அடைந்த தேவசுந்தரமூர்த்தியை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தேவசுந்தரமூர்த்தியை பரிசோதித்த டாக்டர் கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தேவசுந்தர மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர்களுக்கும் கீவளூர் பகுதியை சேர்ந்தவர்களுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிபோதையில் தகராறு ஏற்பட்டதாகவும் அந்த தகராறின் அடிப்படையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தேவசுந்தரமூர்த்தி கொலை செய்யப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

அதன் அடிப்படையில் கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த 6 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்