கருணாநிதி மறைவையொட்டி தி.மு.க.வினர் மவுன ஊர்வலம்
வேப்பனப்பள்ளியில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, மவுன ஊர்வலம் நடைபெற்றது.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் தி.மு.க. தலைவரும், மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சருமான கருணாநிதிக்கு மவுன அஞ்சலி ஊர்வலம் நேற்று நடந்தது. இதற்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், தளி சட்டமன்ற உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் தலைமை தாங்கினார். வேப்பனப்பள்ளி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட துணை செயலாளருமான பி.முருகன் முன்னிலை வகித்தார்.
இதில் மாவட்ட பொருளாளர் ஜெயராமன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், பொதுக்குழு உறுப்பினர் சின்னசாமி, வேப்பனப்பள்ளி ஒன்றிய செயலாளர் ரகுநாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் வேப்பனப்பள்ளியில் உள்ள குப்பம் பஸ் நிறுத்தத்ததில் இருந்து காந்தி சிலை வரை கருணாநிதி உருவப்படத்துடன் தி.மு.க.வினர் மவுன ஊர்வலம் சென்றனர். மேலும் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.