மாத்தூர் ஊராட்சியில் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகள் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
மாத்தூர் ஊராட்சியில் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடத்தை அடுத்த மாத்தூர் ஊராட்சியில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள சாலைகளின் ஓரத்தில் குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. மேலும் குடியிருப்புகள் அதிக அளவில் உள்ள இந்த பகுதியில் சாலை ஓரத்தில் உள்ள கால்வாய்களில் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் அப்படியே தேங்கி கிடக்கிறது. அதனால் கழிவுநீர் அந்த பகுதியில் தேங்கி நிற்கிறது.
இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் இந்த பகுதியில் வேளாண்மை கூட்டுறவு வங்கி, துணை சுகாதார நிலையம், பள்ளிகள், அங்கன்வாடி மையம் போன்றவை உள்ளது. இந்த இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள், குழந்தைகள், அலுவலர்கள் உள்பட அனைவரும் இந்த சாலை வழியாகதான் சென்று வருகின்றனர். இந்த குப்பை கழிவுகள் அந்த பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
எனவே உடனடியாக அந்த பகுதியில் சாலை ஓரங்களில் இருக்கும் பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை உடனுக்குடன் அகற்றிடவும், குப்பைகளை கொட்டுவதற்கு கூடுதல் குப்பை தொட்டிகளை சாலையின் ஓரங்களில் முறையான இடத்தில் அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.