மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நிவாரண பொருட்கள் சேகரிப்பு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நிவாரண பொருட்கள் சேகரிப்பு வாகனத்தை கலெக்டர் வழியனுப்பி வைத்தார்.
தர்மபுரி,
கேளர மாநிலத்தில் வரலாறு காணாத பெய்த கனமழையால் அந்த மாநிலத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த மாநில மக்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி பகுதியில் கேரள மாநில மக்களுக்கு உதவிடும் வகையில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டது. இந்த பொருட்கள் எடுத்து செல்லும் வாகனத்தை கலெக்டர் மலர்விழி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பிருந்தா, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், கந்தசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.