குடிநீர்கேட்டு கல்லுப்பட்டி பொதுமக்கள் சாலைமறியல்

கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லுப்பட்டி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் சரியாக வரவில்லை.

Update: 2018-08-19 22:15 GMT
கந்தர்வகோட்டை,

கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லுப்பட்டி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் சரியாக வரவில்லை. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலரிடமும், நிர்வாக அதிகாரிகளிடம் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று கல்லுப்பட்டி கிராமத்தில் உள்ள திருச்சி சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னன், உதவி ஆணையர் நலதேவன், வருவாய் அலுவலர் செந்தில் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்