புள்ளம்பாடி வாய்க்காலில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
புள்ளம்பாடி வாய்க்காலில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமானூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் பளிங்காநத்தம், வெங்கனூர், விளாகம், கோவில் எசனை, கரைவெட்டிபரதூர், கீழக்காவட்டாங்குறிச்சி, ஏலாக்குறிச்சி, தூத்தூர் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளை நிலங்கள் புள்ளம்பாடி வாய்க்கால் மூலம் பாசனம் பெற்று வந்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வாய்க்கால் தண்ணீரை நம்பி தான் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். திருமானூர் ஒன்றியத்திற்கு வரும் இந்த வாய்க்கால் திருச்சி முக்கொம்பிலிருந்து பிரிந்து வருகிறது.
இதில் திருமானூர் ஒன்றிய பகுதியில் உள்ள பளிங்காநத்தம் மானோடைஏரி, வெங்கனூர் ஆண்டியோடை ஏரி, கரைவெட்டி பறவைகள் சரணாலய ஏரி, காமரசவல்லி சுக்கிரன் ஏரி உள்ளிட்ட 4 ஏரிகளும் பெரிய நீர்ப்பிடிப்பு ஏரியாகும். இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக சரியான மழையில்லாமலும், மேட்டூர் அணை நிரம்பாததாலும், புள்ளம்பாடி வாய்க்காலில் சரியாக தண்ணீர் திறக்காததாலும் இந்த பகுதியில் விவசாயம் சரிவர நடைபெறவில்லை.
இந்நிலையில், தற்போது காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்று கொண்டு இருக்கிறது. இதில் பல லட்சம் கன அடி தண்ணீர் கடலில் சென்று வீணாக கலக்கிறது. ஆனால் புள்ளம்பாடி வாய்க்காலின் கடைப்பகுதி நீர்ப்பிடிப்பு ஏரியான சுக்கிரன் ஏரியில் தண்ணீர் இன்னும் பாதியளவு கூட சென்றடையவில்லை. மேலும், அந்த ஏரி தண்ணீரை நம்பி விவசாயம் செய்ய தயாராக இருக்கும் காமரசவல்லி, குருவாடி, கோமான், தூத்தூர் உள்ளிட்ட கிராம விவசாயிகள் தற்போது வேதனையில் உள்ளனர். ஏரியை அரசு முறையாக தூர்வாரவில்லை, வரத்து வாய்க்கால்களையும் முறையாக தூர்வார வில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், காவிரியில் செல்லும் தண்ணீரை புள்ளம்பாடி வாய்க்காலில் கூடுதலாக திறந்து விட்டால் விரைவில் சுக்கிரன் ஏரி நிரம்பும் என்றும், இதனால் விவசாயிகள் விவசாய பணிகளில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர். எனவே, புள்ளம்பாடி வாய்க்காலில் கூடுதல் தண்ணீரை திறக்க அரசு முன்வரவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.