மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பரிகார பூஜை தொடங்கியது

மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் பரிகார பூஜை நேற்று தொடங்கியது. இந்த பூஜை 3 நாட்கள் நடைபெறுகிறது.

Update: 2018-08-19 22:30 GMT
மணவாளக்குறிச்சி,

குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோபுரம் கட்டும் பணி நிறைவடைந்தது. தொடர்ந்து கோவில் திருப்பணிகள் நடந்து வருகிறது. திருப்பணிகளை விரைந்து முடித்து கலசாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கலசாபிஷேகம் நடத்துவதற்கு தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி கடந்த மாதம் 22–ந் தேதி நடந்தது. தேவ பிரசன்னத்தில் பல்வேறு பரிகாரம் செய்ய வேண்டும் என கூறப்பட்டது. இதையடுத்து தேவி சேவா சங்கம் ஏற்பாட்டில் பரிகார பூஜைகள் நேற்று தொடங்கியது.

இந்த பூஜைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.

நேற்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து புண்யாகம், மகா மிர்த்திஞ்ஜய ஹோமம் போன்றவை நடந்தது. பரிகார பூஜையை பாறசாலை ராஜேஷ் நம்பூதிரி, ஸ்ரீநிவாசன் ஆகியோர் நடத்தினர். இதில் கோவில் தந்திரி மகா தேவரு அய்யர், தேவி சேவா சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், உக்ர நாசிம்க ஹோமம், மாலை 5 மணிக்கு மகா சுதர்சன ஹோமம், உச்சாடனம் போன்றவையும், நாளை காலையில் கணபதி ஹோமம், நவ கலசபூஜை, பரிகார கலசபூஜை, மதியம் சிறப்பு உச்ச பூஜை ஆகியவையும் நடக்கிறது.

மேலும் செய்திகள்