வாஜ்பாய் மரணம் குறித்த இரங்கல் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர் கைது
அவுரங்காபாத் மாநகராட்சியில் வாஜ்பாய் மரணம் குறித்த இரங்கல் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.;
அவுரங்காபாத்,
அவுரங்காபாத் மாநகராட்சியில் வாஜ்பாய் மரணம் குறித்த இரங்கல் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.
எதிர்ப்பு
அவுரங்காபாத் மாந கராட்சியின் பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு சிவசேனா மற்றும் பா.ஜனதா கவுன்சிலர்கள் சார்பில் இரங்கல் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிகவுன் சிலர்சையத் மதீன் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பா.ஜனதாகவுன் சிலர்கள்,சையத் மதீனை தாக்கினர். இதையடுத்து கவுன்சிலர்சையத்மதீன் வெளியேற்றப்பட்டார். பின்னர் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கைது
இந்த சம்பவம் குறித்து மாநகராட்சி பாதுகாப்பு அதிகாரி, கவுன்சிலர் சையத் மதீன் மீது போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சையத் மதீனை நேற்று அவுரங்காபாத் நகர போலீசார் கைது செய்தனர்.
மேலும் இரு குழுக்களுக்கு இடையே பகைமையை ஏற்படுத்துதல், கலவரத்தை தூண்டிவிடும் வகையில் பேசுதல், பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்ளுதல் என 3 பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதற்கிடையே பா.ஜனதா கவுன்சிலர்கள், சையத் மதீனை கடுமையாக தாக்கியதாக கூறப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. தனது மீதான தாக்குதல் குறித்து பா.ஜனதா கவுன்சிலர்கள் மீது சையத் மதீன் போலீசில் புகார் செய்துள்ளார்.