முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை - ஓ.பன்னீர்செல்வம்
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தேனி,
தேனி மாவட்டம் லோயர்கேம்ப் வழியாக குமுளிக்கு செல்லும் மலைப்பாதையில் இரைச்சல் பாலம் அருகில், கடந்த 15-ந்தேதி மண்சரிவு ஏற்பட்டதில் சாலை பலத்த சேதம் அடைந்தது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்த மலைப்பாதையில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் கடந்த 4 நாட்களாக குமுளிக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.
நேற்று முன்தினமும் மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இந்த மலைப்பாதை சீரமைப்பு பணிகளை துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வன அலுவலர் கவுதம், தேனி எம்.பி. பார்த்திபன், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி மற்றும் பலர் பங்கேற்றனர்.
ஆய்வைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நெல்லை மாவட்டம் பாபநாசம் முதல் ஊட்டி வரை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. 250 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது. இதனால் வெள்ளம் ஏற்படும் சூழல் உள்ளது. பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் பணிகளை அரசு செய்து வருகிறது.
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து உபரிநீர் கேரளாவுக்கு திறக்கப்பட்டுள்ளது. கடந்த 25 நாட்களுக்கு முன்பு இந்த அணையில் தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்து அணை பலமாக இருப்பதாகவும், அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்றும் சான்றிதழ் வழங்கி உள்ளனர். இதில் அச்சப்பட எதுவும் இல்லை. அணை பலமாக இருப்பதாக பல ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. பூகம்பம் ஏற்பட்டாலும் அணைக்கு பாதிப்பு ஏற்படாது. கேரள மாநிலத்தில் நம் சகோதர்கள் தான் வாழ்கிறார்கள். தமிழகம் வேறு, கேரளா வேறு என்று பிரித்துப் பார்க்கவில்லை. கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு தேனி மாவட்டத்தில் இருந்து தமிழர் கள் பலர் தன்னார்வலர்களாக நிவாரண பொருட் களை அனுப்பி வருகின்றனர். மாவட்ட நிர்வாகமும் நிவாரண பொருட் களை அனுப்பி வைத்துள்ளது. தேனி மாவட்ட அ.தி. மு.க. சார்பில் நாளை (இன்று) நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட உள்ளன. குமுளி மலைப்பாதை சீரமைப்பு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. ஓரிரு நாட்களில் பணிகள் முடிந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடக அணைகளில் நீர் நிரம்பியதை தொடர்ந்து உபரி நீர் திறக்கப்பட்டு, அந்த நீர் காவிரியில் கரைபுரண்டு ஓடுகிறது. மேட்டூர் அணையிலிருந்து நாகப்பட்டினம் வரை 11 மாவட்டங்களில் வெள்ள அபாயம் அறிவிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட கலெக்டர் கள் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு, அவர்களுக்கு தேவையான உணவு வழங்கப்பட்டு வருகிறது. நாகை, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட அனைத்து கடை மடை பகுதிகளுக்கும் காவிரி நீர் சென்றுள்ளது. அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். வெள்ளம் வரும் பகுதிகளில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் முகாமிட்டு பார்வையிட்டு வருகிறார்கள். தமிழக அரசின் செயலாளர்கள் 11 மாவட்டங்களில் முகாமிட்டு நிலைமையை கவனித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வெள்ளத்தினால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.