கோதாவரி ஆற்றில் வெள்ளம்: ஏனாம் பகுதியில் 300 குடும்பங்கள் பாதிப்பு

கோதாவரி ஆற்று வெள்ளம் புகுந்ததால் ஏனாமில் 300 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.;

Update: 2018-08-18 23:17 GMT

புதுச்சேரி,

தென்மேற்கு பருவமழை தற்போது கொட்டி வருகிறது. இதன் காரணமாக கேரளா, கர்நாடகா மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே ஆந்திர மாநிலத்தில் கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் கடைமடை பகுதியில்தான் புதுவை மாநிலத்தின் ஒரு பிராந்தியமான ஏனாம் உள்ளது.

கோதாவரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் சுமார் 300 வீடுகளுக்குள் புகுந்துள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் கேரள மாநில பகுதியில் இருக்கும் மாகி பகுதியிலும் மழை பெய்து வருகிறது. இங்கும் மழையினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு நிர்வாக அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்