கடமலை-மயிலை ஒன்றியத்தில் கண்மாய்களில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள கண் மாய்களில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2018-08-18 23:10 GMT
கடமலைக்குண்டு,

கடமலை-மயிலை ஒன்றியத்தில் 543 ஏக்கர் பரப்பளவில் பஞ்சம்தாங்கி, சாந்தநேரி, பெரியகுளம் உள் ளிட்ட 10 கண்மாய்கள் அமைந் துள்ளது. இதில் ஓட்டணை, பெரியகுளம், பஞ்சம்தாங்கி உள்ளிட்ட கண்மாய்களுக்கு மூல வைகை ஆற்றில் இருந்து வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் எடுத்து வரப் படுகிறது. பிற கண்மாய்களுக்கு மேகமலை அருவி, ஓடைகளில் இருந்து தண்ணீர் வருகிறது.

இந்த நிலையில் கட மலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள கண்மாய்களில் பெரும் பாலானவை தனிநபர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. குறிப்பாக 64 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பஞ்சம்தாங்கி, 81 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சாந்தநேரி, 109 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரியகுளம் உள்ளிட்ட கண்மாய்களில் பெரும் பாலான பகுதியை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகின்றனர்.

கண்மாய்களின் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்ற அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பெரியகுளம், சாந்தநேரி, பஞ்சம்தாங்கி ஆகிய கண்மாய் களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

முதற்கட்டமாக கண்மாய் அளவீடு செய்யப்பட்டு கரைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. சில காரணங்களுக்காக கரைகள் அமைப்பதுடன் பணிகள் முடித்து கொள்ளப்பட்டது. அளவீடு செய்யப்பட்ட பின்னர், தற்போது வரை கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப் படவில்லை.

இதுஒருபுறம் இருக்க, கண்மாய்களுக்கான வரத்து வாய்க்கால்கள் செடிகள், கொடிகள் படர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் மூல வைகை ஆறு மற்றும் ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டாலும் கண் மாய்களுக்கு தண்ணீர் முழுமையாக போய் சேரு வதில்லை. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கண்மாய்கள் அனைத் தும் வறண்ட நிலையிலேயே உள்ளது.

அந்த கண்மாய்களை சார்ந்த விளைநிலங்களும் தரிசாகி கொண்டிருக்கின்றன. வறண்ட நிலையில் உள்ளதால் தனிநபர்கள் கண்மாய் பகுதிகளை எளிதாக ஆக்கிர மிப்பு செய்து விடுகின்றனர். தொடர்ந்து இந்த நிலை காணப்பட்டால் கடமலை- மயிலை ஒன்றியத் தில் உள்ள அனைத்து கண்மாய்களும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கும் நிலை ஏற்படும். எனவே அனைத்து கண்மாய்களிலும் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்