வாஜ்பாய் மறைவுக்கு பாரதீய ஜனதாவினர் அஞ்சலி மவுன ஊர்வலமும் நடந்தது

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி நாமக்கல் மாவட்டம் முழுவதும் பாரதீய ஜனதா கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். மவுன ஊர்வலமும் நடைபெற்றது.

Update: 2018-08-18 22:03 GMT
நாமக்கல்,

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி நாமக்கல் மணி கூண்டு அருகே பாரதீய ஜனதா அமைப்புசாரா தொழிலாளர் பிரிவின் மாநில துணைத் தலைவரும், ஊடகப்பிரிவு சென்னை கோட்ட பொறுப்பாளருமான சக்திவேல் தலைமையில் பாரதீய ஜனதாவினர் வாஜ்பாய் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து சக்தி கல்வி கலாசார அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர்கள் ராஜூ, பரமேஸ்வரி உள்ளிட்டோர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு மலர் தூவினர். பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக நகர பாரதீய ஜனதா சார்பில் மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, ஆர்.எஸ்.எஸ். கோட்ட தலைவர் சுப்பிரமணியம், நகர தலைவர் சண்முகம், மாவட்ட பொதுச்செயலாளர் முத்துக்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு வாஜ்பாயின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, மவுன அஞ்சலி செலுத்தினர்.

வாஜ்பாய் மறைவையொட்டி நாமக்கல் மாவட்ட பாரதீய ஜனதா சார்பில் நாமக்கல்லில் மவுன ஊர்வலம் நடந்தது. இதில் கோட்ட பொறுப்பாளர் முருகேசன், ஆர்.எஸ்.எஸ் மாநில பொறுப்பாளர் ஹரிஹர கோபால் உள்பட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மணி கூண்டில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக இந்த மவுன ஊர்வலம் நடந்தது. இதில் பாரதீய ஜனதா கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சியினர், வணிக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பாரதீய ஜனதா கொடி அரைக்கம்பத்தில் பறந்தன. அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ராசிபுரத்தில் பாரதீய ஜனதா உள்பட அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்ட மவுன ஊர்வலம் நடந்தது. ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் இருந்து புறப்பட்ட மவுன ஊர்வலம் கவரைத்தெரு, கடைவீதி, அண்ணாசாலை வழியாக புதிய பஸ்நிலையம் சென்று முடிவடைந்தது.

இந்த ஊர்வலத்திற்கு பாரதீய ஜனதா மூத்தோர் அணி தலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் வக்கீல் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஹரிஹரன், மாவட்ட துணைத்தலைவர் சித்ரா, ராசிபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வக்கீல் செல்வகுமார், ராசிபுரம் நகர தலைவர் மணிகண்டன், விஸ்வ இந்து பரிசத் மாவட்ட தலைவர் ரகுபதி, பசு பாதுகாப்பு இயக்க பொறுப்பாளர் சந்திரசேகர், ஆர்.எஸ்.எஸ். நகர தலைவர் ராமதாஸ், வித்யாபாரதி மாவட்ட செயலாளர் குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கந்தசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில விவசாய அணி துணை செயலாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மோகனூர் ஒன்றியம் எஸ்.வாழவந்தி, பொன்னேரிப்பட்டி, பாலப்பட்டி, அருர், வளையப்பட்டி, அணியாபுரம், மோகனூர் நகர பகுதிகளில் வாஜ்பாய் மறைவையொட்டி அவரது உருவப்படத்திற்கு பாரதீய ஜனதா சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மோகனூர் ஒன்றிய பொதுச் செயலாளர் கனகராஜ், ஒன்றிய பொதுச் செயலாளர்கள் பாலசுப்பிரமணி, பிரபாகர், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவக்குமார், ஒன்றிய பொருளாளர் அருங்கரைராஜா மற்றும் ஒன்றிய, கிளை, சார்புமன்ற நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பள்ளிபாளையம் ஒன்றியம், நகரம், ஆலாம்பாளையம் பேரூர் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் வாஜ்பாய் மறைவையொட்டி பள்ளிபாளையம் பஸ் நிலையம் அருகில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.

இதேபோல பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி நாமக்கல் மாவட்டம் முழுவதும் பாரதீய ஜனதா கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். பல்வேறு இடங்களில் மவுன ஊர்வலமும் நடைபெற்றது.

மேலும் செய்திகள்