ஆண்டுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்யவேண்டும்
பெட்ரோல், டீசல் விலையை ஆண்டுக்கு ஒருமுறை மத்திய அரசு விலை நிர்ணயம் செய்யவேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்க மகாசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பரமத்திவேலூர்,
பரமத்திவேலூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க 28-வது மகாசபை கூட்டம் பரமத்தி அருகே மரவாபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பரமத்திவேலூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். உபதலைவர் சக்திவேல் வரவேற்றார். செயலாளர் செந்தில்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் முத்துசாமி வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார்.
கூட்டத்தில் கபிலர்மலை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணி, நாமக்கல் டிரெய்லர் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் விற்பனை அலுவலர் விஜய், திருச்செங்கோடு லாரி அசோசியேசன் சங்க தலைவர் பாரி கணேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினர். இதில் பரமத்தி வேலூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முடிவில் பரமத்திவேலூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க இணைச் செயலாளர் வாசு நன்றி கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு.:-
* மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு டீசல் மற்றும் பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்ய அனுமதி வழங்கியதில் இருந்து எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் விலையை மாற்றிக்கொண்டே வருகிறது. இதனால் லாரி வாடகை ஒரே சீராக நிர்ணயம் செய்ய முடியவில்லை. எனவே எண்ணெய் நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* லாரி தொழில் நசிந்துவரும் சூழ்நிலையில் காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடுகள் அதிகம் வழங்குவதாக கூறி ஒவ்வொரு ஆண்டுக்கும் மூன்றாம் நபர் காப்பீட்டு தொகையை உயர்த்திக்கொண்டே வருகிறது. இதனால் லாரி உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் மற்றும் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மத்திய அரசிடம் பேசி மூன்றாம் நபருக்கான பிரீமியத்தை உயர்த்தாமல் இருக்க விமானம் மற்றும் ரயில்களில் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்பீடு செய்வது போன்று தரை போக்குவரத்து துறையிலும் விபத்துகளுக்கு நிர்ணயம்செய்து பிரீமியத்தை உயர்த்தாமல் இருக்க மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும்.
* இந்தியா முழுவதும் உள்ள காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்றவேண்டும்.
* லாரிகள் வரும் வழித்தடங்களில் பெருகிக்கொண்டே வரும் வழிப்பறி கொள்ளை மற்றும் டிரைவரை கொலை செய்தல் போன்றவைகளை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
* கர்நாடகாவிற்கு இணையாக தமிழ்நாட்டிலும் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
* சேலம், கரூர் பைபாஸ் சாலையில் பரமத்தி அருகே ஓவியம்பாளையம் பிரிவு ரோடு, பரமத்தி ரோடு, பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே உள்ள பிரிவு ரோடுகள் ஆகிய இடங்களில் தொடர் விபத்துகளை தடுக்க மேம்பாலங்கள் அமைக்கவேண்டும்.