கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் செல்வதில் சிக்கல் மும்பையில் இருந்து கப்பலில் குடிநீர் செல்கிறது
கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ள நிலையில், மும்பையில் இருந்து கப்பலில் குடிநீர் செல்கிறது.
மும்பை,
கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ள நிலையில், மும்பையில் இருந்து கப்பலில் குடிநீர் செல்கிறது.
பரிதாப நிலை
கேரள மாநிலம் கொல்லத்தையும், தமிழ்நாட்டின் திண்டுக்கல் நகரத்தையும் இணைப்பது தேசிய நெடுஞ்சாலை எண்.183 ஆகும். மழை, வெள்ளத்தால் இந்த நெடுஞ்சாலை பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால் கோட்டயம், குமுளி, இடுக்கி வழியாக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.
மழை, வெள்ளம் காரணமாக உணவுக்கு தவிக்கிற மக்களுக்கு உணவுப்பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை கம்பம்மெட்டு வழியாக எடுத்துச்செல்ல முடியாத பரிதாப நிலை உருவாகி இருக்கிறது.
குடிநீர் செல்கிறது
இதற்கு இடையே பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ள நிலையில் மக்கள் குடிநீர் இன்றி அவதிப்படுகின்றனர். இதனால் மும்பையில் இருந்து கேரளாவுக்கு 8 லட்சம் லிட்டர் குடிநீர், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். தீபக் கப்பல் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. இந்த கப்பல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொச்சிக்கு சென்று அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.