திருவாரூரில் என்ஜினீயரிங் கல்லூரி தொடங்க வேண்டும் மாணவர் பெருமன்றம் வலியுறுத்தல்
திருவாரூரில் என்ஜினீயரிங் கல்லூரி தொடங்க வேண்டும் என மாணவர் பெருமன்றம் வலியுறுத்தி உள்ளது.
சுந்தரக்கோட்டை,
அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மன்னார்குடியில் நடந்தது. கூட்டத்துக்கு பெருமன்றத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரை.அருள்ராஜன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
மாணவர்களின் கல்விக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். தொடக்கக்கல்வி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை அனைவருக்கும் தாய்மொழியில் கட்டாய இலவச கல்வி வழங்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட மாணவர்களுக்கான உணவு மானியத்தொகையை, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உயர்த்தி அறிவிக்க வேண்டும்.
மன்னார்குடியில் மகளிர் கலை அறிவியல் கல்லூரியும், திருவாரூரில் என்ஜினீயரிங் கல்லூரியும் தொடங்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர், பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டை தனியார் பள்ளிகளில் முழுமையாக அமல்படுத்த வேண்டும். பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கென தனியாக பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்.
மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்குவதில் காலதாமதம் செய்ய கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், பாலமுருகன், நிர்வாகிகள் அஜீத்குமார், பாரதி, கோபி, கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.