ஊனமாஞ்சேரியில் நாளை மின்தடை
ஊனமாஞ்சேரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடப்பதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
வண்டலூர்,
ஊனமாஞ்சேரி துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணி நடைபெறுகிறது. ஆகவே கொளப்பாக்கம், ஊனமாஞ்சேரி, போலீஸ் அகாடமி, கிரஷர், நெடுங்குன்றம், ஆலப்பாக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, காரணைப்புதுச்சேரி, ஓட்டேரி மற்றும் ஊரப்பாக்கத்தில் ஒரு பகுதி போன்ற இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை மறைமலைநகர் மின்செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.