பெங்களூருவில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வாக்காளர் சரிபார்ப்பு-காகித தணிக்கை எந்திரம் வருகை
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பெங்களூருவிலிருந்து 800 வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் காகித தணிக்கை எந்திரம் வரப்பெற்றுள்ளது.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பெங்களூருவிலிருந்து 800 வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் காகித தணிக்கை எந்திரம் வரப்பெற்றுள்ளது. இதனை அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி நேற்று ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் விஜயலட்சுமி பேசுகையில், இந்திய தேர்தல் ஆணையம் மூலமாக அரியலூர் மாவட்டத்திற்கு 800 வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் காகித தணிக்கை எந்திரம் பெங்களூருவிலுள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலிருந்து கொண்டுவரப்பட்டன. இந்த எந்திரங்களை தாசில்தார் (தமிழ்நாடு கேபிள் டி.வி. நிறுவனம்) முத்துகிருஷ்ணன் மூலம் அரியலூர் மாவட்டத்திற்கு எடுத்து வரப்பட்டது. இந்த எந்திரங்கள் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைத்து, சீல் வைக்கப்பட்டு, 24 மணிநேர துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றார்.
அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், வருவாய் கோட்டாட்சியர் சத்திய நாராயணன், தாசில்தார் (தேர்தல்) சந்திரசேகரன் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.