வாஜ்பாய் மறைவையொட்டி பா.ஜ.க.வினர் அமைதி ஊர்வலம்

பெரம்பலூரில் மாவட்ட பா.ஜ.க. சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி அமைதி ஊர்வலம் மற்றும் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2018-08-18 22:15 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூரில் மாவட்ட பா.ஜ.க. சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி அமைதி ஊர்வலம் மற்றும் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. ஊர்வலத்திற்கு மாவட்ட தலைவர் சாமிஇளங்கோவன் தலைமை தாங்கினார். பெரம்பலூர் காந்திசிலை முன்பு தொடங்கிய ஊர்வலம் காமராஜர் வளைவு, சங்குபேட்டை, ரோவர் ஆர்ச், பாலக்கரை வழியாக சென்று கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் முடிவடைந்தது. பின்னர் அங்கு அலங்கரிக்கப்பட்ட வாஜ்பாய் உருவப்படத்திற்கு பாரதீய ஜனதா கட்சியின் கோட்ட பொறுப்பாளரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான ஸ்ரீராமகிருஷ்ணா சிவசுப்ரமணியம் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மலர் அஞ்சலி செலுத்தினர். இதில் பா.ஜ.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ஜெயங்கொண்டத்தில் பா.ஜ.க. நகர செயலாளர் ராமர் தலைமையில், ஊர்வலமாக சென்று மவுன அஞ்சலி செலுத்தினர். ஊர்வலம் அண்ணாசிலையில் இருந்து தொடங்கி கடைவீதி, நான்கு ரோடு வழியாக சென்று மீண்டும் அண்ணாசிலையை வந்தடைந்தது. 

மேலும் செய்திகள்