பெரம்பலூர் மாவட்டத்தில் போதிய பருவமழை இன்றி வெள்ளாறு நீர்த்தேக்கம் வறண்டது
பெரம்பலூர் மாவட்டத்தில் போதிய பருவமழை இன்றி வெள்ளாறு நீர்த்தேக்கம் வறண்டு காட்சியளிக்கிறது.;
பெரம்பலூர்,
தமிழ்நாட்டிலேயே வறட்சியான மாவட்டமான பெரம்பலூர் மாவட்டம் கரிசல் மண்பூமியை பெரும்பாலும் கொண்டதாகும். தமிழகத்திலேயே பருத்தி விளைச்சலில் முதன்மை மாவட்டமாக திகழ்ந்த பெரம்பலூர் மாவட்டம், தற்போது மக்காச்சோள உற்பத்தியில் முன்னோடியாக விளங்கி வருகிறது.
வடகிழக்கு பருவமழையை நம்பி உள்ள பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையாகவும், அரணாகவும் விளங்கும் பச்சைமலையில் இருந்து கல்லாறு, சின்னாறு, வெள்ளாறு, கோனேரி ஆறு, சுவேதநதி போன்ற காட்டாறுகள் உற்பத்தியாகின்றன. காட்டாறுகள் கலந்து விடும் வெள்ளாறு வேப்பந்தட்டை, வேப்பூர் ஒன்றியங்கள் வழியாக சென்று கடலூர் மாவட்டம் வழியாக சென்று வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
இதுதவிர சிறுவாச்சூர் அருகே பெரியசாமி மலையில், உற்பத்தியாகும் மருதையாறு, பெரம்பலூர், ஆலத்தூர், அரியலூர், திருமானூர், தா.பழூர் ஒன்றியங்கள் வழியாக பாய்ந்து, கொள்ளிடம் ஆற்றில் கலந்து வங்காள விரிகுடாவை சென்றடைகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 2011 ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை பருவ மழை சரிவர பெய்யாமல் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், 2016-ம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை பச்சைமலையில் பெய்ததால் நீர்நிலைகளை நிறைத்தது. ஆனால் பச்சை மலை தவிர தரைப்பகுதிகளில் 2016-ம் ஆண்டில் கன மழைபெய்யவில்லை. 2017-ம் ஆண்டில் இம்மாவட்ட மக்கள் கடும் வறட்சியால் குடிக்க நீரின்றி வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
ஆடிப்பட்டத்தில் தேடி விதை என்பதற்கேற்ப கோடை உழவிற்கு கூட போதிய மழையின்றி விதை விதைப்பதற்கு வழியின்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய கூலித்தொழிலாளர்கள் கூலிவேலைக்கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர்.
இம்மாவட்டத்தில் கிணற்றுப்பாசனம் அதிகம் நடைமுறையில் உள்ளதால் கடந்த 6 ஆண்டுகளில் நிலத்தடி நீர்மட்டம் 150 அடியில் இருந்து 250 அடிவரை சென்றுவிட்டது. பயிர், காய்கறிகள் சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 908 மி.மீ. ஆகும். கடந்த ஆண்டு இம்மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவுபெய்யவில்லை.
வெள்ளாறு நீர்த்தேக்கம் 16 கண் மதகுகளில் நீரின்றி வறண்டு காட்சியளிக்கிறது. இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் பருவமழை சீசனில் 21 நாட்கள் அடைமழை பெய்தாலே நீர்நிலைகளில் போதிய நீர் ஊற்றம் கண்டு, அந்த ஆண்டும், அதற்கு அடுத்தஆண்டு கோடைக்காலம் வரையிலும் வேளாண்மை சிறப்பாக இருக்கும் என்பது வழக்கமாக இருந்துவருகிறது. ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளில் அடைமழையை காண்பதே மிகவும் அரிதாகிவிட்டது. தென்மேற்கு பருவமழை காலக்கட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் கன மழை பெய்து அங்குள்ள செட்டிஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது.
ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் பருவமழை காலங்களில் கன மழை அரிதாகிவிட்டது. இந்த ஆண்டும், ஆண்டு சராசரி மழை அளவைவிட குறைவாகவே மழை பெய்துள்ளது என்று தெரிவித்தார்.