திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம்
திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவிலில் ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவிலில் ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வெயிலுகந்த அம்மன் கோவில்திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உப கோவிலான வெயிலுகந்த அம்மன் கோவிலில் ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு, அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் கோவிலில் இருந்து கொடிப்பட்டம் பல்லக்கில் புறப்பட்டு, வீதி உலா சென்று மீண்டும் கோவிலை சேர்ந்தது. பின்னர் 11 கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது.
அதிகாலை 5.15 மணிக்கு கோவில் கொடிமரத்தில் சிவகுமார் வல்லவராயர் கொடியேற்றினார். தொடர்ந்து கொடிமர பீடத்துக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் கொடிமர பீடம் தர்ப்பை புற்களாலும், வண்ண மலர்களாலும், பட்டு ஆடைகளாலும் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
27–ந் தேதி தேரோட்டம்விழாவில் கோவில் இணை ஆணையர் பாரதி, ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், காயாமொழி கூட்டுறவு சங்க தலைவர் தங்கேச ஆதித்தன், கோவில் அலுவலர்கள் பிச்சையா, ஜெயந்தி, வடிவேல், மணியம் நவநீதகிருஷ்ணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 10–ம் திருநாளான வருகிற 27–ந் தேதி (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.