கனமழையால் கேரள மாநிலம் பாதிப்பு: நிவாரண பொருட்கள் வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு, பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
கனமழையால் கேரள மாநிலம் பாதிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் நிவாரண பொருட்களை வழங்க வேண்டும் என்று கலெக்டர் கந்தசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை,
கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து உள்ளது. பொதுமக்கள் உணவு இல்லாமலும், வீடு இல்லாமலும் தவித்து வரு கின்றனர். இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப் பட் டுள்ளது. சாலைகள் மழைநீர் செல்லும் பாதையாக மாறி உள்ளதால் எங்கும் செல்ல முடியாமல் மக்கள் வீடுகளின் மாடிகளில் தஞ்சம் அடைந் துள்ளனர். இந்த மழையில் பலர் உயிரிழந்துள்ளனர். ராணுவம் மற்றும் தீயணைப்பு வீரர்கள், போலீசார் பலரை மீட்டு, உதவி செய்து வரு கின்றனர்.
கேரள மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் விதமாக தமிழக மக்கள் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். பல்வேறு தரப்பினர் நிதியுதவி அளித்துள்ளனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி கேரள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக நிவாரண பொருட்கள் வழங்கி உதவி செய்ய வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் முன் எப்போதும் இல்லாத வெள்ளத்தின் காரணமாக அதிகமான சேதங்களும், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளன. இதனால் கேரள மாநிலத்தில் வாழும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேரள மாநிலத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நிவாரண பொருட்களான பொரி, அவல், கடலை மிட்டாய், பால் பவுடர், சர்க்கரை, வெல்லம், தண்ணீர்பாட்டில், தீப்பெட்டி, குளோரின் மாத்திரைகள், அரிசி, பிஸ்கெட் பாக்கெட்டுகள், ரஸ்க், டார்ச் லைட், போர்வைகள், துண்டுகள், மெழுகுவர்த்தி, புதிய ஆடைகள், சானிடரி நாப்கின் போன்றவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட் டத்தில் உள்ள பொது மக்கள், தன்னார்வ தொண்டு நிறுவ னங்கள், தன்னார் வலர்கள் தங்களால் இயன்ற நிவாரண பொருட்களை வழங்கி உதவி செய்யலாம். அவை உடனடி யாக அனுப்பப்பட உள்ளது. எனவே மேற்கண்ட நிவாரண பொருட்களை இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்குள் உதவி கலெக்டர் களான சி.தங்கவேல் (திருவண் ணாமலை), அன்னம்மாள் (செய்யாறு), தண்டாயுதபாணி (ஆரணி-பொறுப்பு) ஆகி யோரை தொடர்பு கொண்டு வழங்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.