வேலூர் அப்துல்லாபுரம் விமான நிலைய ஓடுதள கட்டுமான பணிக்கு பூமி பூஜை
வேலூர் அப்துல்லாபுரத்தில் விமான நிலைய ஓடுதள கட்டுமான பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. கட்டுமான பணிகள் இன்று (சனிக்கிழமை) தொடங்கி, ஒரு ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்,
மத்திய அரசு நாடு முழுவதும் பயனற்ற நிலையில் உள்ள விமான நிலையங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முடிவு செய்தது. அதன்படி ஓசூர் மற்றும் நெய்வேலி, வேலூரில் இருந்து புதிதாக சிறிய ரக விமானங்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டது.
வேலூரில் இருந்து பெங்களூரு, சென்னை, திருப்பதி (ரேணிகுண்டா) ஆகிய நகரங்களுக்கு 18 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானங்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதையடுத்து வேலூர் விமான நிலையத்தில் சீரமைப்பு பணிகளை தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.
அதைத்தொடர்ந்து விமான நிலைய பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்கள் குறித்து அளவீடு செய்யப்பட்டது. மேலும், டெல்லி மத்திய விமான போக்குவரத்து ஆணையரகத்தின் நிலம் அளவீடு மற்றும் தொழில்நுட்பக்குழு அதிகாரிகளும் விமான நிலைய பகுதியில் ஆய்வு செய்து சென்றனர். கடந்த மாதம் விமான நிலையத்தில் ஓடுதளம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது.
முதற்கட்டமாக பெங்களூருவை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் விமான ஓடுதள பாதையை அமைக்க அளவிடும் பணியில் ஈடுபட்டது. அதைத்தொடர்ந்து ஓடுதளத்தில் உள்ள புற்கள், செடி, கொடிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணிகள் நடந்தது. இப்பணிகள் கடந்த 6-ந் தேதி நிறைவடைந்தது.
இந்த நிலையில் விமான நிலைய ஓடுதளம் அமைப்பதற்கான கட்டுமான பணிக்கான பூமி பூஜை நேற்று எளிமையான முறையில் நடந்தது. இதில், பெங்களூருவை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவன அதிகாரிகள் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர். கட்டுமான பணிகள் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘விமான நிலையம் கொண்டு வர முதல்கட்டமாக ஓடுதள கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 800 மீட்டர் நீளம், 40 மீட்டர் அகலத்துக்கு ஓடுதளம் அமைக்கப்படுகிறது. நில சமபரப்பிற்கு ஏற்ப சுமார் 6 அடி உயரத்திற்கு மண், ஜல்லிக்கற்கள் போன்றவை கொட்டி இறுதியில் தார்சாலையில் ஓடுதளம் அமைக்கப்படும். இந்த பணிகள் ஒரு ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து தகவல் மற்றும் தொலைதொடர்பு கட்டுப்பாட்டு அறை, தங்கும் விடுதி, உணவகம், பயணிகள் மற்றும் விமானிகள் ஓய்வறை உள்ளிட்டவை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக் கப்படுகிறது. கட்டுமான பணிகள் அனைத்தும் ரூ.15 கோடி மதிப்பில் நடைபெற உள்ளது’ என்றனர்.