பிறந்த குழந்தை இறந்ததால் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம்
ஒரத்தநாடு அருகே பிறந்த குழந்தை இறந்ததால் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ஒரத்தநாடு,
ஒரத்தநாடு அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தை இறந்தது. டாக்டர் இல்லாமல் நர்சுகள் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாக கூறி பெண்ணின் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள வடக்கூர் தெற்கு சேத்தியை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 34) கூலித்தொழிலாளி. இவரது மனைவி கனிமொழி(25). இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கனிமொழி இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்தார். இதனை தொடர்ந்து கனிமொழி வடக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை பெற்று வந்தார்.
நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து கனிமொழியை அவரது கணவர் பிரகாஷ் உள்ளிட்ட உறவினர்கள் உடனடியாக அவரை வடக்கூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதித்தனர்.
அப்போது அங்கு டாக்டர் பணியில் இல்லை என தெரிகிறது. நர்சுகள் மட்டும் பணியில் இருந்தனர். அவர்களிடம் டாக்டர் எங்கே? என்று கேட்டதற்கு நர்சுகள், பெண் டாக்டர் ஆஸ்பத்திரிக்கு வந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பிரசவ வலியால் துடித்த கனிமொழிக்கு ஆஸ்பத்திரியில் இருந்த நர்சுகள் பிரசவம் பார்த்துள்ளனர். நள்ளிரவு 1 மணியளவில் பிரசவ வார்டில் இருந்து வெளியே வந்த நர்சுகள், கனிமொழிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.
அதன் பிறகு சிறிது நேரம் கழித்து நர்சுகள், பிறந்த குழந்தை இறந்து விட்டதாக பிரகாஷிடம் தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கனிமொழியின் கணவர் பிரகாஷ் மற்றும் உறவினர்கள் டாக்டர் இல்லாமல் நர்சுகள் கவனக்குறைவாக பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்து விட்டதாக கூறி சம்மந்தப்பட்ட டாக்டர் மற்றும் நர்சுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வடக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இறந்த குழந்தையின் உடலை வாங்கிச் செல்வோம் என்றும் கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் தஞ்சை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் ரவீந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இச்சம்பவம் குறித்து மேல் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உறுதியளித்தனர்.
ஆனால் கனிமொழியின் உறவினர்கள் குழந்தையின் இறப்புக்கு காரணமான டாக்டர் உள்ளிட்டோர் மீது போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இறந்த குழந்தையின் உடலை வாங்கிச்சென்று அடக்கம் செய்வோம் எனக்கூறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக சுகாதாரப்பணிகள் துறை மற்றும் போலீசார் மூலமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்டு கனிமொழியின் உறவினர்கள், தங்களது போராட்டத்தை கைவிட்டு இறந்த குழந்தையின் உடலை பெற்றுச் சென்றனர்.