வாஜ்பாய் மறைவு: திருவாரூரில் கடைகள் அடைப்பு
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி திருவாரூரில் கடைகள் அடைக்கப்பட்டன.
திருவாரூர்,
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. திருவாரூரில் வாஜ்பாய் மறைவையொட்டி திருவாரூரில் வர்த்தகர் சங்கம் சார்பில் அனைத்து கடைகளும் மதியம் 3 மணி முதல் 5 மணி வரை அடைக்கப்பட்டன. திருவாரூர் நகராட்சி அலுவலகம் எதிரில் பா.ஜனதா கட்சி சார்பில் வாஜ்பாய் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகர பா.ஜனதா கட்சி சார்பில் வாஜ்பாய் மறைவுக்கு மவுன ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டம் நடந்தது. முத்துப்பேட்டை சாலை அம்பேத்கர் சிலையில் இருந்து மவுன ஊர்வலம் புறப்பட்டு ஜவுளி கடைதெரு, காசுகடை தெரு, அண்ணாசிலை, ராமர் மடத்தெரு, ரெயில்வே சாலை, பழைய பஸ் நிலையம் வழியாக புதிய பஸ் நிலையத்தை சென்றடைந்தது. அங்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க., தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, வர்த்தக சங்கம், சேவை சங்கங்கள், லாரி உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்