ஒர்க்ஷாப்பின் பூட்டை உடைத்து ரூ.65 ஆயிரம், மோட்டார் சைக்கிள் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
கோட்டூர் அருகே ஒர்க்ஷாப்பின் பூட்டை உடைத்து ரூ.65 ஆயிரம்- மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கோட்டூர்,
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே குமாரமங்கலத்தை சேர்ந்தவர் ரிச்சர்ட் (வயது 45). இவர் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். அதனுடன் சேர்த்து பழைய மோட்டார் சைக்கிள் வாங்கி விற்பனை செய்யும் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். இதற்காக ஒர்க்ஷாப்பில் 11 பழைய மோட்டார் சைக்கிள்கள் விற்பனைக்காக வைத்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ரூ.65 ஆயிரத்தை மேஜை டிராவில் வைத்து விட்டு ஒர்க்ஷாப்பையும் பூட்டி விட்டு ரிச்சர்ட் வீட்டிற்கு வந்து விட்டார். நேற்று அதிகாலை 5 மணியளவில் கடைக்கு சென்று பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது டிராவில் வைத்திருந்த ரூ.65 ஆயிரத்தையும், விற்பனைக் காக வைத்திருந்த ஒரு பழைய மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து ரிச்சர்ட் கோட்டூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.65 ஆயிரத்தையும், மோட்டார் சைக்கிளையும் திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.