மாவட்டத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

சேலம் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

Update: 2018-08-17 22:39 GMT
சேலம்,

சேலம் பெரியார் பல்கலைக் கழகம் எதிரில் உள்ள சேலம் பத்மவாணி மகளிர் கல்வி நிறுவனங்கள் சார்பில் கல்லூரி வளாகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதில், பத்மவாணி கல்வி நிறுவனங்களின் தாளாளர் சத்தியமூர்த்தி கலந்து கொண்டு தேசிய கொ டியை ஏற்றி வைத்தார். மேலும் மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கட்டுரைபோட்டி, பேச்சுப்போட்டி, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். இதில் கல்வியியல் கல்லூரி முதல்வர் முத்துக்குமார், மேலாளர் ரமேஷ் மற்றும் அனைத்துதுறை ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

சேலம் வாய்க்கால்பட்டறை ஜெய்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் அரிமா முன்னாள் ஆளுநர் காசி விஸ்வநாதன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். மேலும், மாவட்ட அளவில் நடந்த கோ-கோ போட்டியில் முதலிடம் மற்றும் 3-ம் இடம் பிடித்த மாணவிகளையும் பாராட்டி வெற்றி கோப்பை பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார். இதில் பள்ளியின் தாளாளர் சுப்பையா, முதல்வர் ஜெய்முருகன் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

சேலம் சின்னதிருப்பதி ஜெய்ராம் பப்ளிக் பள்ளி வளாகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஜெய்ராம் கல்லூரி மற்றும் பப்ளிக் பள்ளி தலைவர் ராஜேந்திரபிரசாத் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். இதில் ஜெய்ராம் கல்லூரி தாளாளர் மணிகண்டன், பப்ளிக் பள்ளி தாளாளர் தினேஷ், பள்ளி முதல்வர் பால்சேவியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவில் பள்ளி குழந்தைகள் சுதந்திர போராட்ட தியாகிகள் காந்தி, நேதாஜி, வ.உ.சிதம்பரனார், கொடிகாத்த குமரன், வீரபாண்டிய கட்டபொம்மன், காமராஜர், நேரு வேடமணிந்து வந்தனர். மேலும் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி நடந்தது.

சங்ககிரி பி.எஸ்.ஜி. கல்வி நிறுவனங்களின் சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்வி ஆலோசகர் ரங்கராஜன் தலைமை தாங்கினார். கல்வி நிறுவனங்களின் தாளாளர் மணி மற்றும் நிர்வாகி கலைவாணி ஆகியோர் தேசிய கொடி ஏற்றி வைத்து பேசினார்கள். பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி முதல்வர் கண்ணன் சுதந்திரதினம் குறித்து பேசினார். மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு நிர்வாகிகள் பரிசளித்தனர். அதைத்தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள், மாறுவேடப்போட்டிகள், யோகா ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

தலைவாசலை அடுத்த வீரகனூரில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப் பட்டது. விழாவிற்கு பள்ளியின் தலைவர் அருள்குமார் தலைமை தாங்கினார். இதில் கல்விக்குழு ஆலோசகர் பழனிவேல் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். பள்ளியின் செயலாளர் தங்கவேல், துணைத்தலைவர் வெங்கடேசன், நிர்வாக அலுவலர் ரா ஜேஸ்வரி, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் நாரா யணன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். அதைத்தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். முடிவில் தலைமை ஆசிரியர் விஜயகுமார் நன்றி கூறினார்.

டாக்டர் நாகரத்தினம் பொறியியல் கல்லூரியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் கல்லூரியின் தாளாளர் சந்திரமோகன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மேலும், சுதந்திரத்தின் சிறப்புகள் பற்றியும், தீவிரவாதத்தை கலைந்து இந்தியாவை வல்லரசாக்குவது பற்றியும் மாணவர்களிடையே அவர் பேசினார். அதைத்தொடர்ந்து அனைவருக்கும் அவர் இனிப்பு வழங்கினார்.

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் சுதந்திர விழா நடைபெற்றது. இதில், கூட்டுறவு துறையில் சிறப்பாக பணியாற்றியதற்கான விருதை சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத்துக்கு, மாவட்ட கலெக்டர் ரோகிணி வழங்கி பாராட்டினார்.

மேலும் செய்திகள்