சேலம் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2018-08-17 22:22 GMT
சேலம்,

சேலம் மாவட்டம், வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மகாத்மா காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வீரபாண்டி வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(திட்டம்) பானுமதி, காசாளர் பழனிவேலு மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

வீரபாண்டி ஒன்றியம் அரியாம்பாளையம்(கிழக்கு) ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடந்த விழாவில் தலைமை ஆசிரியை விஜயா தேசிய கொடி ஏற்றினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏ.பி.செல்வராஜ், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி இனிப்பு வழங்கினார். உதவி ஆசிரியை மல்லிகா மரக்கன்றை நட்டார். அரியாம்பாளையம் (மெயின்) தொடக்க பள்ளியில் நடந்த விழாவில் வட்டார கல்வி அலுவலர் அன்பழகன் தலைமையில் தலைமை ஆசிரியை விஜயலதா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். உதவி ஆசிரியை சகாயராணி இனிப்பு வழங்கினார்.

சின்ன சீரகாபாடி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடந்த விழாவுக்கு தலைமை ஆசிரியை தெய்வராணி தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் வடிவேலு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி மேலாண்மை துணைத்தலைவர் பி.பிரியா பள்ளி மாணவ-மாணவிகளுக்கு திருக்குறள், ஆங்கில அகராதி உள்ளிட்ட புத்தகங்களை வழங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாத்திமாதேவி மரக்கன்று நட்டார். உதவி ஆசிரியர் கதிர்வேல் நன்றி கூறினார்.

ஆட்டையாம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் செயல்அலுவலர் சீனிவாசன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலையத்தில் நடந்த விழாவில் இன்ஸ்பெக்டர் நடராஜன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார். தமிழ்நாடு ஆதரவற்றோர் நலவாழ்வு அமைப்பு சார்பில் தலைவர் சாமிபெருமாள் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார்.

ஆட்டையாம்பட்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் கைபுதூரில் உள்ள நூலகம் முன்பு நடந்த விழாவில் தேசிய கொடியை சமூக ஆர்வலர் சாலை சண்முகம் ஏற்றி வைத்தார். நூலகர் மதியழகன், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள ராமலிங்கபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் முடியரசன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் மெடிக்கல் ராஜா தேசிய கொடியை ஏற்றினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சோடா பரமேஸ்வரன், மதியரசன், மின்னாம்பள்ளி ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சங்ககிரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் உதவி கலெக்டர் டி.ராமதுரை முருகன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சங்ககிரி தாசில்தார் அருள்குமார், துணை தாசில்தார்கள் சிவராஜ், ஜெயகுமார், ரமேஷ், வருவாய் ஆய்வாளர்கள் ராஜராமன், கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சங்ககிரி தாசில்தார் அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில் தாசில்தார் அருள்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஜெயசீலன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சங்ககிரி ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் அன்புராஜ், சங்ககிரி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சங்ககிரி யங் ஸ்டார் கிரிக்கெட் கிளப் சார்பில் வி.என்.பாளையம் அரசு பள்ளி வளாகத்தில் ரத்த தான முகாம் நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.

தேவூர் அருகே பொன்னம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பொன்.தனராஜ் தலைமை தாங்கினார். விவசாயி அப்புசாமி முன்னிலை வகித்து கொடியேற்றினார். இதை தொடர்ந்து மாணவ-மாணவிகளின் பெற்றோர், ஆசிரியர்-ஆசிரியைகளிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

தாரமங்கலம் செங்குந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு துணைத்தலைவர் அழகரசன் தலைமை தாங்கினார். தலைவர் டாக்டர் சுப்பிரமணியமுதலியார் தேசிய கொடியை ஏற்றினார். செயலாளர் சக்தி கந்தசாமி முன்னிலை வகித்தார். முதல்வர் பிரபு வரவேற்று பேசினார். பள்ளி நிர்வாகிகள் அமிர்தலிங்கம், ராஜகோபால், ரவி கண்ணன், கலைச்செல்வன், பழனிவேல் ஆகியோர் பரிசு வழங்கினர். துணை முதல்வர் தனலட்சுமி நன்றி கூறினார்.

தாரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை எழில்மணி முன்னிலை வகித்தார். பின்னர் மரக்கன்றுகள் நடப்பட்டன. முடிவில் ஆறுமுகம் நன்றி கூறினார்.

தாரமங்கலம் சன்னதி அரசு தொடக்க பள்ளியில் நடந்த விழாவுக்கு மாதேசன் தலைமை தாங்கினார். பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்று பேசினார். ஆசியன் பேப்ரிக்ஸ் முதன்மை அலுவலர் பழனிவேல்ராஜன் பள்ளிக்கு 150 மரக்கன்றுகளை வழங்கினார். மாணவ-மாணவிகளுக்கு கல்வி குழு உறுப்பினர்கள் பக்தவச்சலம், ரமணி மற்றும் தங்கராஜ், சீனிவாசன் ஆகியோர் பரிசு வழங்கினார். முடிவில் விஸ்வநாதன் நன்றி கூறினார்.

தாரமங்கலம் எம்.ஜி.ஆர்.காலனி அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு அரிமா சங்க தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் பழனிசாமி வரவேற்று பேசினார். கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு லட்சுமணன், வெங்கடாஜலம், செல்வராஜ் ஆகியோர் பரிசு வழங்கினர். முடிவில் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.

தாரமங்கலம் சின்னாகவுண்டம்பட்டி அரசு தொடக்க பள்ளியில் நடந்த விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செங்கோடன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை பத்மாவதி வரவேற்று பேசினார். விஸ்வகர்மா மக்கள் நல அறக்கட்டளை தலைவர் லோகநாதன், செயலாளர் விஜயகுமார், பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசு வழங்கினர்.

தாரமங்கலத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நடந்த விழாவுக்கு மாவட்ட துணைத்தலைவர் செல்வமணி தலைமை தாங்கினார். சாமிநாதன் கொடியேற்றினார்.குமரவேல், கிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோர் பேனா, நோட்டு புத்தகம், இனிப்பு வழங்கினர்.

மேலும் செய்திகள்