மாட்டுவண்டி பந்தயம் அனுமதியின்றி நடத்தியதாக 4 பேர் மீது வழக்கு

திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டியில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதையொட்டி அனுமதியின்றி நடத்தியதாக 4பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Update: 2018-08-17 22:06 GMT
திருப்பத்தூர், 


திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டி கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் வைரன்பட்டி-திருப்பத்தூர் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 31 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என 2 பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 11 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை மலம்பட்டி காயத்திரி ஸ்டோர்ஸ் வண்டியும், 2-வது பரிசை ஆத்தங்குடி கண்ணாத்தாள் வண்டியும், 3வது பரிசை விராமதி சந்திரன் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 20வண்டிகள் கலந்துகொண்டு 2பிரிவாக நடைபெற்றது.

முதல் பிரிவில் முதல் பரிசை நரசிங்கம்பட்டி ஜனனி வண்டியும், 2-வது பரிசை நெய்வாசல் அழகப்பன் வண்டியும், 3-வது பரிசை மாத்தூர் கவுதம்கார்த்திக் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை கீழச்செவல்பட்டி சிதம்பரம் வண்டியும், 2வது பரிசை காரைக்குடி கருப்பணன் வண்டியும், 3வது பரிசை கீழச்செவல்பட்டி சண்முகம் வண்டியும் பெற்றது.

வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மாட்டுவண்டி பந்தயத்தை உரிய அனுமதியின்றி நடத்தியதாக வைரவன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ் குன்றக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வைரவன்பட்டியைச் சேர்ந்த பாண்டியன், பழனியப்பன், பழனிச்சாமி, கருப்பையா ஆகிய 4பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

மேலும் செய்திகள்