காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் உண்டியல் வசூல் ரூ.55¾ லட்சம்
காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் உண்டியலில் ரூ.55¾ லட்சம் காணிக்கை வசூலாகியுள்ளது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் உண்டியலில் வசூலான காணிக்கை எண்ணும் பணி நடந்தது. காஞ்சீபுரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி, கோவில் செயல் அலுவலர்கள் என்.தியாகராஜன், சோ.செந்தில்குமார், ஆ.செந்தில்குமார், அறநிலையத்துறை ஆய்வாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலையில் கோவில் உண்டியலில் வசூலான காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் 410 கிராம் தங்கம், 540 கிராம் வெள்ளி, ரூ.55 லட்சத்து 75 ஆயிரம் கிடைத்தது.