புழல் ஜெயிலில் புத்தககண்காட்சி
புழல் ஜெயிலில் சிறைக்கைதிகளுக்கான புத்தகக்கண்காட்சி சுதந்திரதினமான கடந்த 15-ந்தேதி தொடங்கியது.
செங்குன்றம்,
தமிழ்நாடு சிறைத்துறை தலைவர் அசுதோஷ்சுக்லா உத்தரவின்பேரில் தமிழக சிறைகளில் உள்ள கைதிகளுக்கு பல்வேறு சீர்திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக முதன்முதலில் சிறைக்கைதிகளுக்கான புத்தகக்கண்காட்சி தொடக்க விழா புழல் ஜெயிலில் சுதந்திரதினமான கடந்த 15-ந்தேதி தொடங்கியது.
விழாவுக்கு சிறைத்துறை டி.ஐ.ஜி. முருகேசன் தலைமை தாங்கினார். சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார் கண்காட்சியினை எழுத்தாளர் ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். சென்னை தமிழ் நூல் குழுமத்துடன் இணைந்து நடந்த இந்த புத்தக கண்காட்சியில் 1500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டன. இந்த கண்காட்சியில் திரளான ஜெயில் கைதிகள் பார்வையிட்டும் படித்தும் பயன் பெற்றனர்.
புத்தக கண்காட்சி நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன், இந்திய வருவாய் பணி நிர்வாக அலுவலர் நாமதுரை, தியாகராய கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியை செங்கொடி, எழுத்தாளர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொணடனர்.
முன்னதாக சிறைத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். முடிவில் ஜெயிலர் தர்மராஜ் நன்றி கூறினார்.