மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமை தாங்கி தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான மாற்றுத்திறனாளிகள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். அதை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
பின்னர் அவர் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.23 ஆயிரத்து 500 மதிப்பில் மொத்தம் ரூ.47 ஆயிரத்திற்கான நவீன செயற்கை கால்களை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.