நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

கடலூரில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2018-08-17 21:45 GMT
கடலூர், 

கடலூர் நகராட்சி பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல், குப்பை மேடுகளாக காட்சி அளித்து வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பாதாள சாக்கடை திட்டம் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது.

பூங்கா அமைத்ததில் ஊழல் நடந்துள்ளது. தவறான கட்டிட அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கடலூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சண்.முத்துக்கிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகர தலைவர் ரா.ரமேஷ் வரவேற்றார். மாவட்ட தலைவர் ராஜ்குமார், கடலூர் தொகுதி செயலாளர் சரவணன், மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் பழ.தாமரைக்கண்ணன், மாநில துணை தலைவர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் போஸ்.ராமச்சந்திரன், மாநில அமைப்பு துணை செயலாளர் பி.ஆர்.பி. வெங்கடேசன், மாநில வன்னியர் சங்க துணை தலைவர் தனம், மாநில இளைஞரணி துணை செயலாளர் சந்திரசேகர், துணை தலைவர் விஜயவர்மன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் நகராட்சியில் நடைபெற்றுள்ள பல்வேறு முறைகேடுகள், ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட நிர்வாகிகள் ஸ்டாலின், ரமேஷ், வாட்டர் மணி, ஏ.சி.மணி, சத்தியா, தீபன், நகர நிர்வாகி மதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் ராபின் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்