திருச்சி- ஸ்ரீரங்கத்தை இணைக்கும் காவிரி பாலத்தில் திடீர் விரிசல்
திருச்சி- ஸ்ரீரங்கத்தை இணைக்கும் காவிரி பாலத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டு உள்ளது. பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.
திருச்சி,
திருச்சியையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் உள்ளது. இந்த பாலத்திற்கு காவிரி புதுப்பாலம் என பெயர். மாம்பழச்சாலை பகுதியில் இருந்து திருச்சிக்கு வரும் பாதையில் இந்த பாலத்தின் இடது பக்கம் உள்ள முதல் தூணில் சிறிய அளவிலான விரிசல் ஏற்பட்டு இருப்பது நேற்று முன்தினம் இரவு கண்டு பிடிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்டனர்.
இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில் ‘காவிரி பாலத்தை தாங்கி நிற்கும் முதல் தூணில் உள்ள சிறிய அளவிலான விரிசல் இப்போது உள்ள வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்டது அல்ல. இந்த விரிசல் சில மாதங்களுக்கு முன்பாகவே கண்டு பிடிக்கப்பட்டு, அதனை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் பாலத்திற்கு எந்த வித ஆபத்தும் ஏற்படாது. எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை’ என்றனர்.
திருச்சி மாவட்ட கலெக்டர் கே. ராஜாமணி இது தொடர்பாக நிருபர்களிடம் கூறுகையில் ‘காவிரி பாலத்தின் முதல் தூணில் மிக சிறிய அளவில்தான் ஒரு கோடு போல் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் பாலத்திற்கு எந்த வித ஆபத்தும் ஏற்படாது. பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தினாலும் பாதிப்பு ஏற்படாது’ என்றார்.
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் உள்ள மிகவும் பழமையான இரும்பு பாலத்தின் தூணில் விரிசல் ஏற்பட்டு எந்த நேரத்திலும் அது இடிந்து விழும் அபாய நிலையில் இருப்பதால் காவிரி பாலத்திலும் அதுபோன்ற நிலைமை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது.