பரமக்குடி, கமுதி, அபிராமம் பகுதிகளில் சுதந்திரதினவிழா கொண்டாட்டம்
பரமக்குடி, கமுதி, அபிராமம், பார்த்திபனூர் பகுதிகளில் சுதந்திரதின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
பரமக்குடி,
பரமக்குடியில் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பரமக்குடி சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் விஷ்ணுசந்திரன் தேசியக்கொடி ஏற்றினார். இதேபோல தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பரமசிவன், நகராட்சி அலுவலகத்தில் பொறியாளர் வரதராஜன் முன்னிலையில் ஆணையாளர் நாராயணன், பரமக்குடி யூனியன் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி முன்னிலையில் ஆணையாளர் சந்திரமோகன் ஆகியோர் தேசியக்கொடி ஏற்றினர். நகர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் அமுதா, தலைமை தபால் நிலையத்தில் தபால் அதிகாரி ராஜசெல்வம், பெண்கள் சிறைச்சாலையில் தலைமை காவலர் சசிகலா, எமனேசுவரம் சீர்மரபினர் அரசு மாணவர்கள் கல்லூரி விடுதியில் காப்பாளர் மாரியப்பன், பரமக்குடி சரக கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகத்தில் உதவி இயக்குனர் அனந்தகுமார் ஆகியோர் தேசியக்கொடி ஏற்றினர்.
பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியர்கள் மணிமாறன், சிவக்குமார், கணேசன் ஆகியோர் முன்னிலையில் கல்லூரி முதல்வர் பூபால சந்திரன், கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் சாதிக் அலி தலைமையில் ஜமாத் சபை தலைவர் முகமது ஈசா, செயலாளர் சிகாபுதீன், பொருளாளர் முகமது உமர் ஆகியோர் முன்னிலையில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா ஆகியோர் தேசியக்கொடி ஏற்றினர். சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமகிருஷ்ணன், தலைமை ஆசிரியர் நாகராஜன் ஆகியோர் முன்னிலையில் கல்விக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தேசியக்கொடி ஏற்றினார்.
ஆயிரவைசிய மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் இளங்கோ முன்னிலையில் கல்விக்குழு தலைவர் பாலுச்சாமி, பார்த்திபனூர் இடையர் குடியிருப்பு கிருஷ்ணநிவாஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் செயலாளர் மாயாவதி முன்னிலையில் தாளாளர் பாபு சீனிவாசன், பாரதியார் நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் நாகராஜன் முன்னிலையில் தாளாளர் குணா, யாதவா மெட்ரிகுலேசன் பள்ளியில் செயலாளர் மீசல் சண்முகவேல், கமிட்டி தலைவர் அண்ணா இளம்பரிதி ஆகியோர் முன்னிலையில் கல்விக்குழு தலைவர் வெள்ளைச்சாமி, வ.உ.சி. மெட்ரிகுலேசன் பள்ளியில் ஜெயராமன் தலைமையில் தாளாளர் சுந்தரேசன், இயக்குனர்கள் இளங்கோவன், ரவி ஆகியோர் முன்னிலையில் இயக்குனர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் தேசியக்கொடி ஏற்றினர்.
லயன்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் கல்விக்குழு தலைவர் குமாரசாமி தலைமையில் அரிமா சங்க தலைவர் பழனிச்சாமி, காளிதாஸ் நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ரவி தலைமையில் முன்னாள் தலைமை ஆசிரியர் நாகராஜன், கற்பக விநாயகர் கல்வியியல் கல்லூரியில் செயலாளர் முருகானந்தம் முன்னிலையில் சேர்மன் பாண்டியன், பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ராமர் முன்னிலையில் ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் ராஜகுரு ஆகியோர் தேசியக்கொடி ஏற்றினர்.
பரமக்குடியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நாட்டின் சுதந்திர தினவிழா வையொட்டி தேசியக்கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ராம் பிரபு தலைமை தாங்கினார். பரமக்குடி நகர் தலைவர் கோதண்டராமன், மாவட்ட செயலாளர் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பரமக்குடி கூட்டுறவு நகர வங்கியில் பொது மேலாளர் பாண்டி முன்னிலையில் அதன் தலைவர் வடிவேல் முருகன் தேசியக்கொடி ஏற்றினார். தென்பொதுவக்குடி டி.இ.எல் சி. தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மாலதி முன்னிலையில் முன்னாள் ஊராட்சி தலைவர் சித்திரைச்சாமி, புதுநகர் டாக்டர் அப்துல் கலாம் மெட்ரிகுலேசன் பள்ளியில் சேர்மன் முகைதீன் முசாபர் அலி ஆகியோர் தேசியக்கொடி ஏற்றினர்.
முத்தாலம்மன் பாலிடெக்னிக் கல்லூரியில் அதன் தலைவர் பாலுச்சாமி தலைமையில் பொருளாளர் சுப்பிரமணியன் முன்னிலையில் சபை செயலாளர் ஜெகநாதன் கொடியேற்றினார். சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சங்கம் சார்பில் தலைவர் ஜெயவீரபாண்டியன், பொது செயலாளர் ஹாரீஸ் ஆகியோர் முன்னிலையில் துணை தலைவர் சண்முகசுந்தரம் தேசியக்கொடி ஏற்றினார்.
கமுதி தாலுகா அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தார் நாகராஜன், தென்னரசு, வட்ட வழங்கல் அலுவலர் காதர் ஆகியோர் முன்னிலையில் தாசில்தார் முருகேசன் தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். கமுதி யூனியன் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் வீரராகவன் தலைமையில் ஆணையாளர் தங்கப்பாண்டியன் தேசியக்கொடி ஏற்றினார். கமுதி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையில் இன்ஸ்பெக்டர் சரவணன், பேரூராட்சி அலுவலகத்தில் தலைமை எழுத்தர் பாரதி தலைமையில் செயல் அலுவலர் குமரேசன், கமுதி சத்ரிய நாடார் கல்வி நிறுவனங்களில் டிரஸ்டி குருராஜன், முனியசாமி, சுதால் ஆகியோர் தலைமையில் முறைகாரர் மேகராஜன் ஆகியோர் தேசியக்கொடி ஏற்றினர். கமுதி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம், மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் சண்முகசுந்தரம், இக்பால் உயர்நிலைப்பள்ளியில் தொழில் அதிபர் அப்துல் வகாப் ஆகியோர் தேசியக்கொடி ஏற்றினர்.
கவுரவ உயர்நிலைப்பள்ளியில் செயலாளர் போஸ், தீயணைப்பு நிலையத்தில் மூத்த தீயணைப்பு வீரர் சார்லஸ், பேரையூர் நம்மாழ்வார் வேளாண் தொழில்நுட்ப கல்லூரியில் சேர்மன் அகமது யாசின், பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவாளர் சாந்தி ஆகியோர் தேசியக்கொடி ஏற்றினர். இதேபோல அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் அதன் தலைவர் சிவலிங்கம், செயலாளர் சண்முகராஜ் பாண்டியன், பொருளாளர் ரகுநாத், வட்டார தலைவர் சிவமுருகன், முஜிபுர் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அபிராமம் பேரூராட்சியில் தலைமை எழுத்தர் செல்வராஜ் தலைமையில் செயல் அலுவலர் மெய்மொழி தேசியக்கொடி ஏற்றினார். அபிராமம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி தேசியக்கொடி ஏற்றினார். பாப்பனம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் தலைமை ஆசிரியர் குணசேகரன், அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் காதர் மீரான்கனி ஆகியோர் தேசியக்கொடி ஏற்றி மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினர்.
பார்த்திபனூர் காங்கிரஸ் கட்சி சார்பில் தியாகி சுப்பையா தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்ட் கணேசன் தேசியக்கொடி ஏற்றினார். இதில் வட்டார தலைவர் ராமச்சந்திரன், நகர் தலைவர் கணேசன், சிறுபான்மை பிரிவு அப்தாகீர், கள்ளிக்குளம் முன்னாள் ஊராட்சி தலைவர் முத்துராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.