பர்கூர் அருகே விஷம் குடித்து சிறுமி தற்கொலை போலீசார் விசாரணை

பர்கூர் அருகே விஷம் குடித்து சிறுமி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2018-08-17 03:45 IST
பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள ஐகுந்தம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். கூலித்தொழிலாளி. இவருடைய மகள் அபிராமி (வயது 12). இவர் படிக்காமல் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று முருகன் கூலி வேலைக்காக வெளியே சென்றார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அபிராமி விஷம் குடித்தார். சிறிது நேரத்தில் அவர் வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்தார். மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த முருகன், அபிராமி மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதைத் தொடர்ந்து அவர் உடனடியாக சிறுமியை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அபிராமி இறந்தார். இது குறித்து பர்கூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து சிறுமி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்