பிளஸ்-1 தேர்வை ஒருமுறை மட்டுமே எழுத முடியும் என்ற நிலை உருவாக்கப்படும் அமைச்சர் பேச்சு
இனிவரும் காலங்களில் பிளஸ்-1 தேர்வை ஒருமுறை மட்டுமே எழுத முடியும் என்ற நிலை உருவாக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
அன்னவாசல்,
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வகுப்புகள் தொடக்க விழா, இலுப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இலுப்பூர் புதிய கல்வி மாவட்ட அலுவலகம் தொடக்க விழா, பொது தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா, விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் புரவலர் திட்ட நிதி உதவி வழங்கும் விழா போன்றவை நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் பிரதீப்யாதவ் தலைமை தாங்கினார். கலெக்டர் கணேஷ் முன்னிலை வகித்தார்.
விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் சிறப்பாக கல்வி கற்கும் வகையில் பள்ளிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் பள்ளிகளில் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் மேம்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மாணவர்களின் கற்றல் விகிதம் அதிகரித்து உள்ளது. எனவே ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சிறப்பாக கல்வி அளிக்க வேண்டும். மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்று வாழ்வில் முன்னேற வேண்டும், என்றார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது;-
ஒருநாட்டின் முன்னேற்றத்திற்கு ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. அரசு பள்ளிகளில் திறமையான ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதன்மூலம் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பல சாதனைகளை புரிந்து வருகின்றனர். அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்புகள், கணினி வகுப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டு உள்ளது. கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு சிறந்த கல்வியை தருவது அரசு பள்ளியே ஆகும்.
மொழி பாடங்களில் இரண்டு தேர்வுகள் ஒரு தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில் பிளஸ்-1 தேர்வை ஒருமுறை மட்டுமே எழுத முடியும் என்ற நிலை உருவாக்கப்படும். எனவே ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சிறப்பாக கல்வி கற்பித்து எதிர்கால மாணவர்களை சிறந்த மாணவர்களாக உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் ஆறுமுகம் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா, கூட்டுறவு சங்க தலைவர் சின்னதம்பி, மாவட்ட கல்வி அதிகாரி குணசேகரன், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல்முறையாக பள்ளி மாணவிகளின் பாதுகாப்பிற்கு கண்காணிப்பு கேமரா செயல்பாட்டை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, பள்ளி நூலகத்தில் 962 மாணவிகள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் சுற்றுச்சூழல் வழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், தமிழக அரசு பள்ளி கல்வித் துறையில் பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிமுகப்படுத்தி இந்தியாவிற்கே முன்மாதிரி துறையாக விளங்குகிறது.
பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டு புதிய வண்ண சீருடை வழங்கப்பட்டு உள்ளது. இதேபோல் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலும், 6 முதல் 8-ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு புதிய வண்ண சீருடைகள் வழங்கப்பட உள்ளது. 6 முதல் 8-ம் வகுப்பு வரை 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. 9, 10, 11, 12-ம் வகுப்புகளில் கணினி வசதிகளுடன் கூடிய புதிய வகுப்புகள் தொடங்கப்படும். தமிழகம் முழுவதும் 500 பள்ளிகள் முதலில் தேர்ந் தெடுக்கப்பட்டு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். பள்ளி படிப்புடன் ஸ்கிள் டிரைனிங் வகுப்புகள் சேர்க்கப்பட்டு கற்பிக்கப்படும். இதன்மூலம் தமிழகத்தில் 12-ம் வகுப்பு முடித்த அனைவருக்கும் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது, என்றார்.