சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 62 நிறுவனங்கள் மீது நடவடிக்கை அதிகாரி தகவல்

திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 62 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களின் ஒருங்கிணைந்த தொழிலாளர் உதவி ஆணையர் பாஸ்கரன் கூறினார்.

Update: 2018-08-16 22:00 GMT
திருவாரூர்,

சென்னை தொழிலாளர் ஆணையர் நந்தகோபால் உத்தரவின்படி, திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் லட்சுமிகாந்தன் மற்றும் தொழிலாளர் இணை ஆணையர் தர்மசீலன் அறிவுரையின் படி, தொழிலாளர் துறை துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள் சுதந்திர தினத்தையொட்டி திருவாருர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் உள்ள வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தொழிலாளர்களுக்கு சுதந்திர தினத்தில் விடுமுறை அளித்தல், சுதந்திர தினத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்குதல் உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பது பற்றி ஆய்வு நடத்தினர்.

மொத்தம் 136 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் விதிமுறைகளை மீறி தொழிலாளர்களுக்கு சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காமல் பணியமர்த்திய 62 நிறுவனங்களின் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் தேசிய பண்டிகைகள் மற்றும் சிறப்பு விடுமுறைகள் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்