சிறுமியை கற்பழித்தவருக்கு சாகும் வரை ஜெயில் - போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

சிறுமியை கற்பழித்தவருக்கு சாகும் வரை ஜெயில் தண்டனை வழங்கி போக்சோ கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.;

Update: 2018-08-15 23:06 GMT
மும்பை,

மும்பை சயான் பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந் தேதி 13 வயது சிறுமி தனியாக நடந்து சென்று கொண்டு இருந்தாள். அப்போது அங்கு வந்த அயாஸ் அன்சாரி என்பவர் சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்தார். அவர், சிறுமியின் தந்தையை நன்றாக தெரியும் என அவளிடம் கூறினார்.
பின்னர் அவர் சிறுமியை ஏமாற்றி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள கட்டிடத்திற்கு அழைத்து சென்று, கற்பழித்துவிட்டு தப்பிச்சென்றார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அயாஸ் அன்சாரியை கைது செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.ஏ. பரலியா குற்றவாளி அயாஸ் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார். மேலும் அவர் குற்றவாளியை சாகும் வரை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார்.

குற்றவாளி அயாஸ் அன்சாரி ஏற்கனவே மும்பையில் தனியாக நடந்து செல்லும் சிறுமிகளை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஆவார். இவருக்கு நீதிமன்றம் ஏற்கனவே 4 பாலியல் வழக்குகளில் தண்டனை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்