என்.ஆர்.காங்கிரஸ் அலுவலகத்தில் சுதந்திர தின விழா: ரங்கசாமி தேசியகொடி ஏற்றினார்
என்.ஆர்.காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தேசியகொடியேற்றினார்.
புதுச்சேரி,
புதுவை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி தேசியகொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார். விழாவில் எம்.எல்.ஏ.க்கள் டி.பி.ஆர்.செல்வம், என்.எஸ்.ஜே.ஜெயபால், அசோக் ஆனந்து, சுகுமாறன், கோபிகா, முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், ராஜவேலு, தியாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நேரு, தமிழ்ச்செல்வன், நிர்வாகிகள் லூயிகண்ணையா, வேல்முருகன், பாலமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
குறிஞ்சிநகர் நலவாழ்வு சங்கம் மூலம் நடந்த சுதந்திர தினவிழாவில் துணை சபாநாயகர் சிவக்கொழுந்து பங்கேற்று தேசியகொடி ஏற்றினார். மேலும் மகாவீர் நகர் நலவாழ்வு சங்கம், செல்லபெருமாள்பேட்டை இளைஞர்கள் சார்பில் நடந்த விழாவிலும் அவர் தேசியகொடியேற்றி ஏற்றினார். பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு சிவக்கொழுந்து பரிசுகளை வழங்கினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தட்டாஞ்சாவடி தொகுதிக்குழு சார்பில் பாக்குமுடையான்பட்டு காரல்மார்க் படிப்பகத்தில் நடந்த விழாவில் விடுதலை போராட்ட வீரர் செங்கேணி தேசியகொடி ஏற்றினார். நிகழ்ச்சியில் நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுசெல்வம், தொகுதி செயலாளர் முருகன், துணை செயலாளர் செல்வம், பொருளாளர் தனஞ்செழியன், மாநில குழு உறுப்பினர் எழிலன், கிளை செயலாளர்கள் தென்னரசு, முருகன், சிவக்குமார், பாலமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.