கிராமசபை கூட்டத்தில் பெண்கள் திடீர் தர்ணா டாஸ்மாக் கடையை மூடகோரிக்கை
நல்லம்பள்ளி அருகே கிராமசபை கூட்டத்தில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள காட்டம்பட்டி ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி கிராமத்தில் ஒருசில நபர்களை வைத்து கூட்டம் நடத்தி விட்டு கூட்டம் முடிந்துவிட்டதாக அதிகாரிகள் அறிவித்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி செயலாளர் நாகராஜனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஊராட்சியில் வரவு, செலவு கணக்கை காட்ட வேண்டும் எனவும், குடிநீர் தட்டுப்பாடு குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேட்டு பொதுமக்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சிலர் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நல்லம்பள்ளி அடுத்த பாளையம்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட காளியப்பன்கொட்டாய் கிராமத்தில் கிராம சபை கூட்டம், ஊராட்சி செயலர் முருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பணி மேற்பார்வையாளர் விஜயா சிறப்பு பார்வையாளாரக கலந்து கொண்டு பேசினார். இதனை தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
இந்த விவாதத்தின் போது பாளையம்புதூர் கூட்ரோடு அடுத்த சனி சந்தை பகுதியில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடையால், அப்பகுதி விவசாய நிலங்களுக்கு செல்லும் பெண்கள் முதல் பள்ளி கல்லூரிக்கு சென்று வரும் மாணவிகள் வரை பாதுகாப்பில்லாமல் அச்சத்தில் சென்று வரும் நிலை உள்ளது.
எனவே சனி சந்தை பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பெண்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கூட்டத்தில் டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தர்மபுரி அருகே உள்ள கே.என்.சவுளூர் பகுதியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினார்கள். இதேபோல் கிருஷ்ணாபுரம் சுற்றுவட்டார பகுதியில் நடந்த கிராமசபை கூட்டங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் வலியுறுத்தினார்கள். சில இடங்களில் நடந்த கிராமசபை கூட்டங்களில் கோரிக்கைகள் தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றகோரி வாக்குவாதமும் நடைபெற்றதால் சலசலப்பு ஏற்பட்டது.