கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க பொதுமக்களுக்கு தேனி கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2018-08-15 21:30 GMT

தேனி,

இதுகுறித்து தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கேரள மாநிலத்தில் இடுக்கி, வயநாடு, மலப்புரம், பாலக்காடு, எர்ணாகுளம், ஆழப்புழா, கோட்டயம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தால் வீடு மற்றும் உடைமைகள் அடித்து செல்லப்பட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு நிவாரண உதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

எனவே அவர்களுக்கு இந்திய செஞ்சிலுவை சங்கம் வாயிலாக நிவாரண உதவிகள் சேகரிக்கப்படுகிறது. நிவாரண உதவிகளை வழங்க விருப்பம் உள்ளவர்கள் நிவாரண உதவிகளை வழங்கலாம். நிவாரண உதவிகளை காசோலை அல்லது வரைவோலையாகவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சோப், பற்பசை, பிஸ்கெட், மெழுகுவர்த்தி, அரிசி, சமையல் பாத்திரங்கள், பலசரக்கு பொருட்கள், போர்வை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான புதிய ஆடைகள், குழந்தைகளுக்கான புதிய ஆடைகள் போன்றவற்றை வழங்கலாம்.

காசோலை மற்றும் வரைவோலை வழங்குபவர்கள், ‘‘ மிஸீபீவீணீஸீ ஸிமீபீ சிக்ஷீஷீss ஷிஷீநீவீமீtஹ் – ஜிணீனீவீறீஸீணீபீu ஙிக்ஷீணீஸீநீலீ, ணிரீனீஷீக்ஷீமீ, சிலீமீஸீஸீணீவீ–8 என்ற பெயருக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. நன்கொடையாக வழங்கும் தொகைக்கு வருமான வரிச்சட்டம் 80ஜி–யின் படி வருமான வரி விலக்கு உண்டு.

நிவாரணப் பொருட்களை வழங்குபவர்கள், தேனி பழைய பஸ் நிலையம், போடி பஸ் நிலையம் அருகில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்க அலுவலகத்திலும், தேனி மாவட்ட கிளையிலும் வழங்கலாம். இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 19–ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 91717–12525, 97899–99377, 94437–43263 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்