தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனாதையாக கிடந்த பெண் குழந்தை போலீஸ் விசாரணை

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறை அருகே, பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தை அனாதையாக கிடந்தது.

Update: 2018-08-15 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறை அருகே, பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தை அனாதையாக கிடந்தது. இதை பார்த்த சிலர், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர், தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசாரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் சைல்டு லைன் அமைப்பினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். குழு உறுப்பினர்கள் அஜித்குமார், செண்பகமலர் ஆகியோர் விரைந்து வந்து, குழந்தையை மீட்டு தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் உள்ள தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்த்தனர். குழந்தையை டாக்டர்கள் பரிசோதித்தபோது நல்ல நிலையில் இருப்பது தெரியவந்தது.

இந்த குழந்தையை வீசி விட்டு சென்ற தாய் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், குழந்தையை எதற்காக அனாதையாக வீசி விட்டு சென்றார்? கள்ளக்காதலில் பிறந்ததா? என பல்வேறு கோணங்களில் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்