கனமழை காரணமாக கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
கனமழை காரணமாக கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பெருஞ்சாணி அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் உபரியாக திறந்து விடப்படுகிறது. ஒரே நாளில் பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 9 அடி உயர்ந்துள்ளது. மழை தொடர்ந்து பெய்து வரும்நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.