வானவில் : மோட்டார் சைக்கிள் பஞ்சரானால்?

மோட்டார் சைக்கிளோ அல்லது ஸ்கூட்டரோ அது ஓடிக் கொண்டிருக்கும் வரையில் பிரச்சினையில்லை.

Update: 2018-08-15 07:14 GMT
என்ஜினில் பிரச்சினையாகி நின்றால் கூட அருகிலிருக்கும் மெக்கானிக் ஷாப் வரை தள்ளிக் கொண்டு செல்லலாம். ஆனால் பஞ்சராகிவிட்டால், வண்டியை தள்ளிக் கொண்டு செல்வது மிகவும் சிரமம்.

பொதுவாக வாகனம் பஞ்சராகிவிட்டால் உடனே ஓரமாக நிறுத்திவிட வேண்டும். பின்னர் ஆணி குத்தியிருந்தால் அதை எடுத்து விட வேண்டும். இல்லையெனில் அது தொடர்ந்து குத்தி புதிய டியூப் மாற்ற வேண்டிய நிலையை ஏற்படுத்திவிடும்.

அடுத்து காற்றடிக்கும் மவுத் பகுதியில் உள்ள ‘செக்’ நட்டை கழற்றி டியூபை உள்ளே தள்ள வேண்டும். இதன் மூலம் காற்று போன டியூப் நைந்து போவதைத் தடுக்கலாம்.

பஞ்சரானால் வெகு தூரம் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு செல்வதைத் தவிர்க்கவும். பஞ்சர் போடுபவரை அழைத்து வந்து சக்கரத்தை கழற்றி எடுத்து பஞ்சர் போட்டு மாட்டிய பிறகு ஓட்டிச் செல்வதே சிறந்தது.

மேலும் செய்திகள்