வானவில் : நோக்கியாவின் அதிரடி தயாரிப்புகள்

செல்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது நோக்கியா நிறுவனம்.

Update: 2018-08-15 05:52 GMT
நோக்கியா நிறுவனம் சமீபத்தில் நோக்கியா-3, நோக்கியா-5 மற்றும் நோக்கியா-6 என்ற பெயரில் தனது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் சிறப்புகளை இங்கே காண் போம்.

நோக்கியா-3

இதன் விலை சுமார் ரூ. 9,499. விலை குறைந்த ஸ்மார்ட் போன்களில் முன்னணியில் உள்ள போன் இதுவாகும். பாலிகார்பனேட் பாடி மற்றும் அலுமினியம் பிரேம் கொண்டது. 5 அங்குல டிஸ்பிளே, சிங்கிள் மற்றும் டுயல் சிம் வசதிகள், 8 எம்.பி. கேமரா, காரினிங் கொரில்லா கிளாஸ் திரை, ஆண்ட்ராய்ட் நவ்கட் ஓ.எஸ். 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. இன்டர்னல் மெமரி, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் பிராஸசர், 2650 mAh பேட்டரி, LTE 4நி இணைப்பு வசதி ஆகியவை உள்ளன.

நோக்கியா-5

இந்த போன் சுமார் ரூ. 12,899 விலை கொண்டதாகும். 5 அங்குல பொலரைய்ட் HD காட்சி திரை கொரில்லா கண்ணாடியுடன் ஆனது. ஆண்ட்ராய்ட் 7.1.1 நவ்கட் மென்பொருள், ஸ்னாப்ட்ரகன் 330 பிராஸசர், 2 ஜி.பி. ரேம், 8 மெகா பிக்ஸல் கேமரா, ஆட்டோ போகஸ் வசதி, 4 ஜி இணைப்பு வசதி, 16 ஜி.பி. சேமிப்பு வசதியும் இதை 128 ஜி.பி. வரை விரிவுபடுத்தி பயன்படுத்தும் வசதியும் இந்த போனில் உள்ளது.

நோக்கியா-6

இதன் விலை சுமார் ரூ. 14,999 ஆகும். திரையின் அளவு 5.5 அங்குலம், HD தரத்திலானது. கொரில்லா கண்ணாடி, கைரேகை சென்சார், ஆண்ட்ராய்ட் 7 நவ்கட் மென்பொருள், ஸ்னாப் டிராகன் 430 பிராஸசர், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. சேமிப்பும் இதை 128 ஜி.பியாக விரிவுபடுத்தி பயன்படுத்த முடியும். 16 பிக்ஸல் கேமரா மற்றும் டால்பி ஒலி வசதியும் இதில் உண்டு. 

மேலும் செய்திகள்