தகிசரில் ஆற்றில் தவறி விழுந்து 2 வாலிபர்கள் பலி

தகிசரில் ஆற்றில் தவறி விழுந்து 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.;

Update:2018-08-15 05:11 IST
மும்பை,

மும்பை தகிசர் கிழக்கு பகுதியில் ஓடும் தகிசர் ஆற்றின் தடுப்புச்சுவரில் நேற்றுமுன்தினம் வாலிபர்கள் 2 பேர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென ஒருவர் ஆற்றில் தவறி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்றொருவர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தார். இதில், அவரும் ஆற்றுக்குள் விழுந்துவிட்டார். இந்த சம்பவத்தில் ஆற்றுக்குள் விழுந்த 2 பேரும் பாறையில் மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்து தண்ணீரில் மூழ்கினர்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கஸ்தூர்பா மார்க் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இதில், ஒருவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பலியானார். மற்றொரு வாலிபர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர்களது பையில் இருந்த பான்கார்டு மூலம் அவர்களது பெயர் திலிப் சோனி(வயது30), ரவி சவுகான்(35) என்பது மட்டும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்