கபிலர்மலையில் கோவில்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்கக்கோரி உண்டியலில் மனு

கோவில்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்கக்கோரி கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் இந்து முன்னணியினர் சார்பில் உண்டியலில் மனு போடப்பட்டது.

Update: 2018-08-14 22:45 GMT
பரமத்தி வேலூர்,

தமிழகத்தில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்கக்கோரி, கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் உள்ள வரசித்தி விநாயகர் சன்னதி உண்டியலில் கோரிக்கை மனுவை இந்து முன்னணியினர் காணிக்கையாக செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 34 ஆயிரம் கோவில்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்க வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் குளங்களை மீட்க வேண்டும். கோவிலில் சாமி சிலைகள் திருடுபோவதை தடுக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக போராட எங்களுக்கு கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி சக்தியை கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி பொதுச்செயலாளர் கோபிநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்