கடற்கரை காந்தி திடலில் கலைவிழா: நாராயணசாமி முரசு கொட்டி தொடங்கி வைத்தார்

புதுச்சேரி அரசு கலை, பண்பாட்டுத்துறை மற்றும் தஞ்சைத் தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் கலை விழா கடற்கரை சாலை காந்தி திடலில் தொடங்கியது. இதனை முதல்–அமைச்சர் நாராயணசாமி முரசு கொட்டி தொடங்கி வைத்தார்.

Update: 2018-08-14 22:45 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறை மற்றும் தஞ்சைத் தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் கலை விழா கடற்கரை சாலை காந்தி திடலில் தொடங்கியது. விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு முரசு கொட்டி தொடங்கி வைத்து பேசினார்.

விழாவில் புதுவை அரசு தலைமை செயலர் அஸ்வனி குமார், லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., தஞ்சை தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் ஜோசப் தைரியராஜ் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்த கலை விழா வருகிற 16–ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் புதுவை மாநில கலைஞர்கள் மட்டுமின்றி தமிழ்நாடு, குஜராத், கேரளா, கர்நாடகம், மத்திய பிரதேசம், மணிப்பூர், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, திரிபுரா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டு தங்கள் மாநிலத்தின் கலாசார கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றுகிறார்கள்.

மேலும் இந்த கலைவிழா புதுவை கடற்கரை மட்டுமின்றி முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் திடல், வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில், தெற்கு கோபுரவாசல், நெட்டப்பாக்கம் பர்வதவர்தினி ராமலிங்கேஸ்வரர் கோவில் திடல், கிருமாம்பாக்கம் மந்தைவெளி திடல்கள் என 5 இடங்களில் நடைபெறுகிறது. காரைக்காலில் கலைவிழா வருகிற 17, 18 ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.

மேலும் செய்திகள்