அரசு பணி தேர்வுக்கான வயது வரம்பை தளர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் அரசு பணி தேர்வுக்கான வயது வரம்பை தளர்த்தக்கோரி புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-08-14 22:30 GMT

புதுச்சேரி,

புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள காவலர், ஆசிரியர், ஓவியர் பதவிக்கான தேர்வில் சட்டமன்றத்தில் ஒப்புதல் அளித்ததுபோல் வயது வரம்பை தளர்த்தக்கோரி புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில நிர்வாகிகள் தேர்வுக்குழு தலைவர் எமிலன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சாமிநாதன், மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன், அ.தி.மு.க. மாணவர் அணி தலைவர் வி.சி.சி.நாகராஜன் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் அமுதன், நிர்மல்ராஜ், விக்னேஷ், மணிவண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்